கொவிட் பரவல் காரணமாக, இலங்கையில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், பாடசாலைகளை திறப்பது தொடர்பான சுகாதார ஒழுங்குவிதிகள் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி 5 ஆம் தரத்திற்கு கீழுள்ள வகுப்புகளை முதற்கட்டாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுகாதார ஒழுங்குவிதிகள், விரைவில் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும் நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை தளர்த்திய பின்னரே பாடசாலைகளை திறக்கும் தினம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.