இலங்கையில் 2020/2021 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் போது, மாவட்ட ரீதியில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் சதவீதங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளன.
2020 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இந்த சதவீதங்களின் அடிப்படையில் மாவட்ட ரீதியாக இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பெற்றுக் கொள்ள முடியும்.
இதேவேளை, பல்கலைக்கழகங்களுக்கு மாவட்ட ரீதியில் இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் ஒக்டோபரில் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.