இலங்கையின் யொஹானி டி சில்வா பாடிய ‘மெனிகே மகே ஹிகே’ பாடல் அமெரிக்க வீதிகளிலும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
புகழ்பெற்ற இளம் வயலின் கலைஞர் கரோலினா ப்ரோட்சென்கோ ‘மெனிகே மகே ஹிதே’ பாடலை அமெரிக்க வீதிகளில் இசைக்க ஆரம்பித்துள்ளார்.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 10 வயது சிறுமி கரோலினா ப்ரோட்சென்கோ குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பின்னர், அமெரிக்க வீதிகளில் வயலின் இசைக்க ஆரம்பித்துள்ளார்.
பல்வேறு முன்னணி பாடல்களையும் வயலின் மூலம் இசைத்து, சிறுமி கரோலினா ப்ரோட்சென்கோ புகழ்பெற்றுள்ளார்.
உலக அளவில் வைரல் ஆகியுள்ள ‘மெனிகே மகே ஹிதே’ பாடலை கரோலினா இனிமையாக வயலின் இசைத்திருக்கிறார்.
யொஹானியின் ‘மெனிகே மகே ஹிதே’ இப்போது கரோலினாவின் வயலின் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியா வீதிகளிலும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.