இலங்கை சந்தையில் மீண்டும் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லாப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு இரண்டிற்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் டொலருக்கான பற்றாக்குறை மற்றும் வணிக வங்கிகளால் கடன் கடிதங்கள் வழங்கப்படாததால் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியவில்லை என லாப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யு கே.எச். வேகபிடிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, லாப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனங்கள் இரண்டுமே சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்காக அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளன. எனினும் அதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக லாப்ஸ் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுகள் நிலவிய நிலையில், தற்போது லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு காணப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.