இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகளை அதிகரிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கிலோ பால்மாவின் விலையை 350 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என்று பல்மா இறக்குமதி நிறுவனங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலைலேயே இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் இது தொடர்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது, அதன் விலையை 200 ரூபாவினால் அதிகரிப்பதற்கு ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று நிதி அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவில் ஆராயப்படவுள்ளதாகவும், அதற்கு பின்னரே இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது இலங்கை சந்தையில் ஒரு கிலோ பால்மா பக்கட் 945 ரூபாவிற்கும், 400 கிராம் பக்கட் 380 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.