
twitter/ranil wickremesinghe
இலங்கையை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்பதற்கு 20 வருட கால வரையறை கொண்ட தேசிய கொள்கை ஒன்று அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் 115 நினைவு தின நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களுக்கு அரசியல் மற்றும் அரசியல் கட்சிகள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கமொன்று இருந்தாலும் இயங்குவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு தேசிய கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
ஆட்சியாளர்கள் மாறினாலும், நாட்டின் தேசிய கொள்கை மாறக்கூடாது.
20 வருடங்களுக்கு மாறாத தேசிய கொள்கை ஒன்றுடன் பயணித்தால் எமது 100 ஆவது சுதந்திர தினத்தின் போது, பலமான இலங்கையைக் கட்டியெழுப்பாலாம்”
என்று ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.