November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 15 – 19 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி!

Vaccinating Common Image

இலங்கையில் 15 முதல் 19 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அத்தோடு 12 வயதுக்கு மேற்பட்ட உடல் உபாதைகள் மற்றும் நோய் நிலைமைகள் உள்ள சிறுவர்களுக்கும் இந்த தடுப்பூசி ஏற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைமாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியே சிறந்தது என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதன்படி இன்று நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணிக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது, பைசர் தடுப்பூசிகளை குறித்த வயதுப் பிரிவினருக்கு வழங்க நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் பைசர் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் மே மாதம் ஒப்புதல் அளித்தது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைப்படி, பைசர் தடுப்பூசி கொவிட் தொற்றுக்கு எதிராக 95% செயல்திறன் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.