November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்களில் பாடசாலைகளை திறக்க திட்டம்!

இலங்கையில் 200 க்கும் குறைந்த மாணவர்களை கொண்ட சுமார் 5,000 பாடசாலைகளை அடுத்த இரண்டு வாரங்களின் பின்பு திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் புதன்கிழமை(15) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதன்படி, சுகாதார ஒழுங்கு விதிகளுக்கமைய பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புகளை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை திறக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து தற்போது கல்வித் துறைசார் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பாடசாலை போக்குவரத்து சேவை ஊழியர்கள் விரைவில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.