(Facebook/SriLankaEmbassyTokyo)
ஜப்பானில் உள்ள விவசாய பண்ணைகளில் 1,000 இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க ஜப்பான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சு கூறுகிறது.
இன்று (15) காலை ஜப்பானுக்கான இலங்கை தூதர் குணசேகரவுடன் ஜூம் தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்ததாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கூறினார்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முன்வந்தமைக்காக ஜப்பானுக்கான இலங்கை தூதருக்கு விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நன்றி தெரிவித்தார்.
இந்த வேலை வாய்ப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து மொழி மற்றும் பிற தொடர்புடைய பயிற்சிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் கூறினார்.
இந்த கலந்துரையாடலில் தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளும் ஜப்பானில் உள்ள விவசாய பண்ணை உரிமையாளர்களும் பங்கேற்றுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.