
தலைமன்னார், ஊருமலை கடற்கரையில் 79 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினரால் 14 ஆம் திகதி இரவு குறித்தப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது படகொன்றில் இருந்து 9.9 கிலோ ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 28 மற்றும் 36 வயதுடைய தலைமன்னார் ஊருமலை பகுதியை சேர்ந்தவர்கள் என கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.