
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் மூளையை பரிசோதிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.
இன்று (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சிகளோ தங்கள் அதிகாரங்களை சரியாகப் பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை.
அதேபோல, அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கொரோனாவை கட்டுப்படுத்துவதை ஒதுக்கிவைத்து விட்டு தங்கள் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களை செயல்படுத்துவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை என அவர் குற்றம் சுமத்தினார்.
இதனிடையே, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதன் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்றும் பேராசிரியர் ஆசு மாரசிங்க இதன் போது தெரிவித்தார்.