June 12, 2025 16:53:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேலும் ஒருதொகை ‘பைசர்’ தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன

File Photo

அமெரிக்காவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேலும் தொகை ‘பைசர்’ தடுப்பூசிகள் இன்று இலங்கை வந்துள்ளன.

அதன்படி, 76,000 தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவை பாதுகாப்பாக கொழும்பிலுள்ள களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

ஏற்கனவே இலங்கைக்கு 10 இலட்சம் வரையான பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.

இதேவேளை ரஷ்யாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட 120,000 ‘ஸ்புட்னிக்-வீ’ தடுப்பூசிகளும், சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும் இந்தவாரத்தில் இலங்கை வரவுள்ளன.