January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடன் நெருக்கடியில் இருந்து விடுபட சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே பொருத்தமானது

நாட்டின் கடன் நெருக்கடியை தவிர்க்க தற்காலிக தீர்வுகளை நாடாது நீண்டகால திட்டத்திற்கு செல்ல வேண்டும்.ஒன்று நீண்டகால கடன் திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் அல்லது சர்வதேச நாணய நிதியத்தை நாடியே ஆக வேண்டும், இந்த இரண்டு வழிமுறைகளில் மட்டுமே நாட்டை மீட்க முடியும் என இலங்கையின் பிரதான வியாபாரிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டின் டொலர் பெறுமதியை அதிகரிக்க அனுமதித்தால் நாட்டில் மட்டும் வாழவே முடியாத நிலைமை உருவாகும்.நாட்டின் சகல அத்தியாவசிய பொருட்களினதும் விலை அதிகரிக்கும்.
அதேபோல் நாட்டில் 20 வீதமான வியாபார,வர்த்தக வர்க்கத்திடம் முறையான வரிகளை அறவிட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுகாதார நிலைமைகளை கையாள வேண்டும்.அதற்காக நீண்டகாலம் வழங்கப்பட்டுள்ளது.அதில் சுகாதார தரப்பு வெற்றி கொண்டுள்ளதாக தெரியவில்லை.சுகாதார தரப்பினருக்கு நாம் அதிக நிதியை ஒதுக்கி அவர்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்கினோம்.வைத்திய கட்டமைப்பை மேலும் பலப்படுத்த எம்மால் உதவி செய்ய முடியும்.

எனவே சுகாதார தரப்பும் சவால்களை கையாண்டு நாட்டின் நிலைமைகளுக்கு கைகொடுக்க வேண்டும்.இப்போது நாட்டில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.தடுப்பூசியை நம்பி 90 வீதமான சவால்களை வெற்றி கொள்ள முடியும்.ஏனைய பத்து வீதமானதை வைத்திய கட்டமைப்பை பலப்படுத்தும் பக்கம் செலுத்தியாக வேண்டும்.

அவ்வாறு இருந்தால் விரைவாக எம்மால் நாட்டை திறக்க முடியும்.அதனை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.அதேபோல் டொலர் பெறுமதியை கட்டுப்படுத்தியாக வேண்டும். இல்லையேல் எமது கடன் தொகை மூன்று மடங்கு அதிகரிப்பை காட்டும்.இது பாரதூரமான விடயமாகும்.இப்போதுள்ள நிலையில் சகல இறக்குமதி பொருட்களுக்கும் கொவிட் வரியை அறவிட வேண்டும்.மக்களிடம் நேரடி, மறைமுக வரிகளில் சகலதையும் அறவிடுவது கடினமானது.அதேபோல்,நாட்டில் இரண்டு சட்டம் நடைமுறையில் இருக்க முடியாது.

இது சர்வதேச முதலீடுகளை பாதிக்கும்.டொலர் பெறுமதி அதிகரித்தால் அத்தியாவசிய பொருட்கள் சகலவற்றினதும் விலை அதிகரிக்கப்பட வேண்டும்.சர்வதேச நாணய நிதியம் பூதம் அல்ல. நாம் பேசினால் அவர்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.