அமைச்சரவைப் பத்திரம் இன்றி, கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, அமைச்சரவை பத்திரமின்றி, வாய்மொழி மூலம் கூறி குறித்த திட்டதிற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், அவற்றை வழங்குவதற்கான நிபந்தனைகளை தயாரித்தல், விற்பனைக்கான விலைகள், ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்திற்குமான அதிகாரத்தை நிதி அமைச்சின் செயலாளருக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அமைச்சரவை பத்திரமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாகவும், இதனால் இந்தத் திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.