இலங்கையில் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உயர்வடைந்துள்ளது.
3.5 பில்லியன் அமெரிக்க டொலர் வரையில் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதித்தினால் இலங்கைகாக ஒதுக்கியுள்ள 800 மில்லியன் டொலர் விசேட உள்ளீட்டு உரிமை நிதியின் ஊடாக நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பங்களாதேஷ் உடனான செலாவணி பரிமாற்ற திட்டத்தின் ஊடாக 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஆகஸ்ட் மாதத்தில் மத்திய வங்கிக்கு கிடைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.