இலங்கையின் எரிபொருள் நெருக்கடியைத் தீர்க்க 250 கோடி டொலர் கடன் பெற வலு சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுள்ள கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளிக்க அமெரிக்காவின் ‘கன்செப்ட் குளோபல்’ என்ற நிறுவனத்திடம் இருந்து கடனுதவி பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2 வருட சலுகைக் காலத்துடன் 12 வருடங்களில் இந்த கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதாகவும் 3 சதவீத வட்டிக்கு இந்த கடனுதவியைப் பெறுவதாகவும் வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றுக்கு 330 கோடி டொலர் கடன் செலுத்தவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.