
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
இதன்போது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் உருவப்படத்திற்கு யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜால் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இணையவழியில் இடம்பெற்ற இந்த விசேட நிகழ்வில் அரசியல் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் பாரதியாரின் நினைவு தினத்தன்று யாழ்.அரசடி வீதியில் அமைந்துள்ள பாரதியாரின் சிலைக்கு மரியாதை செய்யும் நிகழ்வு இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறுவது வழமையாகும்.
எனினும் தற்போதைய கொரோனா தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக இம்முறை நினைவுதின நிகழ்வுகள் இணைய வழியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.