January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

9/11 தாக்குதலுக்கு 20 வருடங்கள்; அமெரிக்க மக்களுக்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியது இலங்கை

photo: Twitter/ 9/11 Memorial & Museum

ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பல அப்பாவி மக்களின் உயிர் மற்றும் உடலுறுப்புக்களின் இழப்புக்கு வழிவகுத்த செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலின் 20 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் ஒருமைப்பாட்டை தெரிவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் சமகால வரலாற்றில் மிகவும் வேதனையான நிகழ்வை அவர்கள் நினைவுகூரும் இத்தருணத்தில், அமெரிக்க மக்கள் மற்றும் அரசாங்கத்துடனான இலங்கையும் ஒருமைப்பாட்டைப் வெளிப்படுத்துவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்த அனைவருக்கும் இலங்கை மக்கள் சார்பில் வெளியுறவு அமைச்சு அஞ்சலி செலுத்தியுள்ளது.

“நீண்ட காலமாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு, அதன் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்ட ஒரு நாடு என்ற வகையில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் மற்றும் வெளிப்பாடுகளிலும் ஒழிப்பதற்காக அனைத்து நாடுகளும் ஒன்றிணைவதற்கான தேவையை இலங்கை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றது”

என்று இலங்கை வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.