இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி வந்த படகுடன் ஒன்பது வெளிநாட்டவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த படகில் ஹெரோயின் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்புக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆழ்கடலில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும், படகு மற்றும் போதைப்பொருள் தொகையை கரைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பில் 1997 என்ற இலக்கத்தின் ஊடாக தகவல் வழங்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.