இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான செயலணிக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, நாட்டில் இலட்சம் வரையிலான சிறுவர்களின் ஆரம்பக் கல்வி மற்றும் இதேபோன்ற எண்ணிக்கையிலான சிறுவர்களின் முன்பள்ளி கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வேளையில், பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து கல்விசார் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்தாலோசித்தார்.
நாட்டில், 100 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 3000 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாடசாலைகளைத் திறப்பதற்கான இயலுமை தொடர்பில் ஆராய்ந்து விரைவான பரிந்துரைகளை வழங்குமாறு, சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.