தரம் 7 முதல் 13 வரையான இரண்டு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசிகளை செலுத்துவதற்கான கலந்துரையாடல்கள் நடந்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
“கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாடசாலைகள் அவ்வப்போது மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்க உலக சுகாதார நிறுவனம் மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.
ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தியவுடன், பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி முடிந்தால் பாடசாலைகளை மீண்டும் திறப்பது பற்றி பரிசீலிக்கலாம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.