May 5, 2025 2:49:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

20 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

20 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் வகை போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினர் பேலியகொட பகுதியில் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது 30 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 1.6 கிலோ கிராம் ஐஸ் வகை போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் போது, விசேட அதிரடிப்படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.