
இலங்கையின் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இறுதி ஆண்டுப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் கல்லூரிகளின் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான பரீட்சைகள் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நிலைமை காரணமாக அறிவிக்கப்பட்ட தினத்தில் பரீட்சைகள் நடத்தப்படாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்கான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.