இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
கொவிட் தொற்று பரவல் காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 7 முதல் ஒக்டோபர் 7 வரை இவ்வாறு வீசா காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வீசா புதுப்பிக்கப்படாத காலத்துக்கு தண்டப்பணம் விதிக்கப்பட மாட்டாது என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் குறிப்பிட்ட காலத்தில் இலங்கையை விட்டு வெளியேற விரும்புபவர்கள், விமான நிலையத்தில் உரிய விசா கட்டணத்தை செலுத்த முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.