July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு காலப்பகுதியில் குடும்ப தகராறுகளால் 150 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதி!

File Photo

இலங்கையில் கடந்த 10 நாட்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், குடும்ப தகராறுகள் காரணமாக தாக்கப்பட்ட 150 க்கும் மேற்பட்டோர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடும்ப முரண்பாடுகள் மற்றும் மதுபோதையில் இருந்தவர்களிடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக தாக்குதலுக்கு உள்ளானவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு இவர்களிடையே தங்கள் கணவர்களால் தாக்கப்பட்ட 30 மனைவிமார்கள் அடங்குவதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த 10 நாட்களில் வீடுகளில் தீக்காயங்கள் காரணமாக சுமார் 100 பேர் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் 23 மற்றும் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் கொழும்பு மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.