வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோர் ஏற்கனவே உள்ள சட்ட விதிமுறைகளுக்கு அமைய பணியகத்திற்கு செலுத்த வேண்டிய முழு தொகையையும் செலுத்தி, முன்பதிவு செய்வது கட்டாயமானது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வெளிநாட்டு தொழில்களுக்கு செல்ல எதிர்பார்த்திருக்கும் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள தாம் பணியாற்றுகின்ற நிறுவனத்தில் பதிவு செய்வது கட்டாயமானது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.
இதனிடையே, கப்பல்களின் சேவையில் இணைந்து கொள்ளும் நபர்கள், வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் அல்லது ஒப்பந்த அடிப்படையில் வெளிநாட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ள சில நபர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் தமது பெயர்களை பதிவு செய்வதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய நபர்கள் கொரோனா தடுப்பூசிக்கு விண்ணப்பிக்கும்போது தங்கள் நிறுவனத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.