இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் சீன அபிவிருத்தி வங்கி ஆகியன 1,080 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கியுள்ளன.
இலங்கையின் சர்வதேச நாணய கையிருப்பை பலப்படுத்துவதற்காகவே இந்த உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் டொலர் கையிருப்புக்கு 780 மில்லியன் அமெரிக்க டொலரை இணைத்துள்ளது.
அத்தோடு, சீன அபிவிருத்தி வங்கி மூலம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நிதியுதவிகள் மூலமும் இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு ஸ்திரத்தன்மை அடையும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.