January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் இராணுவத்தினரால் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு உதவித் தொகை வழங்கி வைப்பு!

யாழ்ப்பாணத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு இராணுவத்தினரால் உதவித் தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்குவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குநர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதி பங்களிப்பில் கொரோனா இடர் காலத்தில் சேவையாற்றி வரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் முகமாக இந்த உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது.

அதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் 84 பேருக்கும் மற்றும்  குடும்பநல உத்தியோகத்தர்கள் 276 பேருக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் 512 ஆவது பிரிகேட் தலைமையகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குநர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

This slideshow requires JavaScript.