January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் பலரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடுகின்றனர்’: அமெரிக்க தூதுவர்

இலங்கையில் பலரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் விடயத்தில் பதிலைத் தேடிக்கொண்டிருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சர்வதேச தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்குவது பலியாளை மாத்திரம் அன்றி அவரது குடும்பம் மற்றும் சமூகத்தையும் பாதிப்பதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.