January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மரண தண்டணை கைதி ‘பொட்ட நெளஃபர்’ கொவிட் தொற்றினால் உயிரிழப்பு!

மரண தண்டணை கைதி, பிரபல பாதாள குழு உறுப்பினரான “பொட்ட நெளஃபர்” எனப்படும் மொஹமட் நியாஸ் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், பரிசோதனைக்காக பூஸா சிறைச்சாலையில் இருந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

இதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இவர் மாற்றப்பட்டுள்ளார் .

சிகிச்சை பெற்று வந்த நிலையில் மொஹமட் நியாஸ் இன்று (28) இரவு 7.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை செய்யப்பட்ட வழக்கில் பொட்ட நெளஃபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.