
தனது ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்க முடியாத நிலையில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என பலரும் தமது ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்கு முன்வந்துள்ள நிலையில், எஸ்.பி. திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தான் கடன் ஒன்றைப் பெற்றுக்கொண்டதால் சம்பளம் முழுவதையும் அதற்காக செலுத்த வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது தான் மனைவியின் சம்பளத்திலல் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.