இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ சென்ஹொங் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சபநாயாகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தற்போதைய கொவிட் பரவல் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை சீன அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கும் என்று சீனத் தூதுவர் சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார, நிதி ஒத்துழைப்பு மற்றும் பாராளுமன்ற நட்புறவைபலப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையின் நீண்டகால நட்பு நாடு என்ற ரீதியில்சீன அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.