November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கட்டுப்பாடின்றி உயரும் சீனி விலை!

இலங்கையில் சீனியின் விலை கட்டுப்பாடின்றி நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்கிறது.

இதற்கமைய தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் சீனியின் சில்லறை விலை 200 ரூபாவிற்கும் மேல் அதிகரித்துள்ளது.

சிலவாரங்களுக்கு முன்னர் 115 ரூபா முதல் 130 ரூபா வரையான விலைகளில் விற்பனையான சீனி கிலோ ஒன்றின் விலை தற்போது 210 ரூபா முதல் 220 ரூபா வரையில் விற்பனையாவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

105 ரூபாவிற்கு விற்பனை செய்யக் கூடிய சீனியே தற்போது 200 ரூபாவுக்கும் மேலான விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சீனி இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினாலேயே நாட்டில் அதன் விலைகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.

அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து சீனி நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனாலேயே அதன் விலை கட்டுப்பாடு இன்றி உயர்வடைந்து செல்வதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இதற்கு கட்டுப்பாட்டு விலையை அறிவித்து விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இலங்கை மக்கள் வருடாந்தம் சுமார் 500 மெட்ரிக் டொன் சீனியை பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்கின்றனர். அதனை ஈடு செய்ய 100 மெட்ரிக் டொன் சீனி நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதுடன்,  எஞ்சிய தொகை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.