
2021 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளுக்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பரீட்சைக்கு தோற்றவுள்ளோர் எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி வரையில் விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை மற்றும் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை கருத்திற்கொண்டு விண்ணப்ப கால எல்லையை நீடிக்கத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
புலமைப் பரிசில் பரீட்சையை நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவதற்கும் உயர்தரப் பரீட்சையை நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 திகதி வரையில் நடத்துவதற்கும் கல்வி அமைச்சினால் கடந்த ஜுலை மாதத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.