நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோகிராம் அரிசியை 100 ரூபாவை விடவும் குறைந்த விலையில் வழங்குவதற்கு அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
உலகளாவிய கொவிட் தொற்று நிலைமையில் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் போக்கு உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலைமையில் மக்களின் முக்கிய உணவுப்பொருளான அரிசியின் விலையை அதிகரிப்பதற்கு இடமளிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி குறைந்த விலையில் அரிசியை விநியோகிக்கக் கூடிய வகையில் வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.