பாவனைக்கு உதவாத ஒருதொகை சீனி கொழும்பு புறக்கோட்டை பகுதியில் நுகர்வோர் அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய புறக்கோட்டை பகுதியில் லொறியொன்றில் இருந்து 200 சீனி மூடைகள் மீட்கப்பட்டதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த சீனி மூடைகள் கல்முனைக்கு கொண்டு செல்ல தயாராக வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கல்முனையில் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகித்து விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.