January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா காலமானார்!

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா தனது 63 ஆவது வயதில்  இன்று (23) காலமானார்.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று மாலை  உயிரிழந்துள்ளார்.

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ். தவராசாவின் பாரியாராவார்.

இவர் இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பல வழக்குகளில் முன்னிலையாகி அவர்களின் விடுதலைக்காக வதிட்டு வந்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் சிலகாலம் செயற்பட்டிருந்தார்.

அத்தோடு, அக்கட்சியின் முக்கிய வழக்குகளில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.