கொழும்பு, கொம்பனித் தெரு பகுதியில் அமைந்துள்ள தொல் பொருள் பழமை வாய்ந்த டி சொய்சா கட்டடத்தை இடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
டி சொய்சா கட்டடத்தின் குத்தகைதாரர்கள், நகர அபிவிருத்தி அதிகாரசபை கட்டடத்தை இடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அங்கு வசிப்பவர்கள் தமது குடியிருப்புகளையும் வணிகங்களையும் காலி செய்யத் தொடங்கியுள்ளனர்.
1870 களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட குறித்த கட்டடம் 150 வருடங்களுக்கு மேல் பழமையானதாகும்.
ஜூன் மாதத்தில் இந்த கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததன் பின்னர் இடிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
கட்டடத்தை இடிக்க உரிமையாளர் முன்னதாக அனுமதி கோரியிருந்த போதிலும் அதற்கான அனுமதி தொல்பொருள் திணைக்களத்தினால் மறுக்கப்பட்டிருந்தது.
எனினும் எதிர்ப்புகளை மீறி கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த நிலத்தை இந்திய நிறுவனமான டாடா ஹவுசிங் டெவலப்மென்ட் கம்பெனிக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.