இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் கத்தக் மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, கொவிட்-19 நோயாளர்களின் சிகிச்சைக்கு தேவையான ஒருதொகை மருத்துவ உபகரணங்களையும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் வழங்கி வைத்துள்ளார்.
பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 225 செயற்கை சுவாசக் கருவிகள் இதன் போது, இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்த நன்கொடைக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை தொடர்ச்சியாக பேணுவதன் முக்கியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.