May 23, 2025 15:36:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 2000 ரூபாய் உதவித் தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று இரவு முதல் அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களின் பட்டியல் ஒன்றை உடனடியாகத் தயாரிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளர், மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் சமர்ப்பிக்கும் பட்டியலுக்கு அமைய அடுத்த வாரம் முதல் 2000 உதவித் தொகையை வழங்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.