May 24, 2025 19:32:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து – மீனவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தல்!

இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான எக்ஸ்-பிரஸ் பேர் கப்பல் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது

காலியில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அகில இலங்கை பொது மீனவர் சம்மேளன அமைப்பாளர் ரத்ன இதனை தெரிவித்தார்.

நாட்டின் கொவிட் – 19 தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு இதுவரை போராட்டங்கள் நடத்தப்படவில்லை என்றாலும், தேவைப்பட்டால் எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் போராட்டம் நடத்துவார்கள் எனவும் அவர் கூறினார்.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு முதல் கட்டமாக ரூ .720 மில்லியனை  கப்பல் நிறுவனம் வழங்கியுள்ளது.