July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெலிகம – வலான வனப்பகுதியில் துப்பாக்கிகள், ரவைகள் மீட்பு

வெலிகம – வலான வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 5 துப்பாக்கிகள், 8 மெகசின்கள் மற்றும் 10 ரவைகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த ஆயுதங்கள், தென் பகுதியிலுள்ள பாதாள குழுவினருக்கு உரித்தானதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.