இலங்கையில் பாண் உட்பட பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 5 ரூபாயினாலும், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை 10 ரூபாயினாலும் அதிகரிக்க தாம் தீர்மானித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதேபோன்று, ஒரு கிலோ கிராம் கேக்கின் விலை 100 ரூபாயினால் அதிகரிக்கப்படுவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.