
பாகிஸ்தானில் இருந்து 6 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசி இறக்குமதி செய்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுடன் இலங்கை மேற்கொண்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.