April 24, 2025 7:43:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அரசாங்கம் சீன அபிவிருத்தி வங்கியுடன் புதிய கடன் வசதியில் கைச்சாத்து!

இலங்கை அரசாங்கமும் சீன அபிவிருத்தி வங்கியும் 2 பில்லியன் யுவான் (61.5 பில்லியன் ரூபாய்)நிதி வசதிக்கான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக சீன தூதரகம் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சீனாவுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பாலித கோஹன குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

இது தொடர்பில் இலங்கைக்கான சீன தூதரகம் விடுத்துள்ள பதிவில்,

கொவிட் தொற்று நிலையை அடுத்து நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பின்னடைவிலிருந்து மீண்டு வருவதற்கு உதவும் வகையில் இந்த கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.