
இலங்கையில் மக்கள் ஒன்றுகூடும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இன்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் திருமண நிகழ்வுகள் மற்றும் விழாக்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ நிகழ்வுகளை நடத்த முடியாது என்று இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
கொவிட் 19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதுவேளை உணவகங்களில் ஒரே நேரத்தில் அங்குள்ள ஆசன எண்ணிக்கையில் 50 வீதமானவர்களுக்கு மட்டுமே இருக்க முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
முடிந்தவரை பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு இராணுவத் தளபதி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.