January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சில சுகாதார வழிகாட்டல்களை சட்டமாக்குவதற்கு தீர்மானம்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் சில வழிகாட்டல்களை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்தார்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் (16) திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் மேலும் கூறினார்.

இதனிடையே நாடு முழுவதும் கொவிட் தொற்றாளர்களை வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கும் திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டார்.