January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லூர் கொடியேற்றத்திற்காக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

நல்லூரிலுள்ள செங்குந்த மரபினர் வருடா வருடம் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை வழங்கி வருகின்றனர்.

அதன்படி யாழ். சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, அங்கிருந்து கொடிச்சீலை மாட்டு வண்டிலில் பருத்தித்துறை வீதி ஊடக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று, சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25நாட்கள் நடைபெறவுள்ளது.

This slideshow requires JavaScript.