
அரசாங்கம் பால் மா இறக்குமதிக்கான வரியை முழுமையாக நீக்கினாலும் இறக்குமதி செய்ய முடியாத நிலை தொடர்வதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பால் மா தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பால் மா இறக்குமதி மீதான வரியை அரசாங்கம் நீக்கியது.
இறக்குமதி வரி நீக்கப்பட்டதால் பால் மா கிலோ ஒன்றுக்கு ஏற்படும் நஷ்டத்தில் 100 ரூபாயை மீட்டெடுக்க முடியுமாக இருந்தாலும், மேலும் 200 ரூபாய் நஷ்டம் இருப்பதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், வரி விதிப்பு நீக்கப்பட்டாலும், பால் மா கிலோ ஒன்றுக்கு 200 ரூபாய் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டில் பால் மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என்று உள்நாட்டு பால் மா உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.