May 24, 2025 19:23:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பால் மா இறக்குமதி வரியை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களுக்கான வரி விகிதத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு சந்தையில் நிலவும் பால் மா தட்டுப்பாடு தொடர்பாக அமைச்சரவை கவனம் செலுத்தியதைத் தொடர்ந்தே, இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் பால் மா விலையை அதிகரிக்காமல், தற்போதுள்ள பால்மா இறக்குமதிக்கான வரி விகிதத்தை திருத்தம் செய்வதன் மூலமோ அல்லது வேறு பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கோ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் போதியளவு பால்மாவை தேசிய சந்தையில் விநியோகிப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதி அமைச்சருக்கு, அமைச்சரவை அதிகாரம் வழங்கியுள்ளது.